தினசரி முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, March 1, 2024

தினசரி முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!

 தினசரி முந்திரி பருப்புகளை  சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!


முந்திரி மூலம் கிடைக்கும் சக்திவாய்ந்த நன்மைகளில் ஆரோக்கிய இதயம், வலுவான நரம்பு மற்றும் தசை செயல்பாடு உள்ளிட்ட பல அடங்கும்.


உடல் எடையை குறைக்க.: 


கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த முந்திரி பருப்பில் அடங்கி இருக்கும் மெக்னீசியம் பெரிதும் உதவுகிறது. முந்திரியில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும்,

கொழுப்பை எரிக்கவும், உதவி உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 


மேலும் முந்திரி ஒப்பீட்டளவில் புரதத்தின் நல்ல ஆதாரமாக உள்ளதால், தினசரி சரியான அளவு இதை சாப்பிடுவது உண்மையில் எடையை குறைக்க உதவுகிறது


சருமம் பளபளக்க:


 முந்திரி பருப்புகளில் செலினியம் அதிகமாக உள்ளது, இது வைட்டமின் ஈ-யுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. தவிர முந்திரியில் உள்ள காப்பர் தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பளபளப்பாகவும் மற்றும் பொலிவாக மாற உதவுகிறது. முந்திரி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் முந்திரி ஆயிலில் நிறைந்து இருக்கும் செலினியம்,ஜிங்க், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சருமம் ஆரோக்கியமாகவும் சுருக்கம் இல்லாமல் இருக்கவும் உதவுகிறது.


ஆரோக்கியமான கண்பார்வைக்கு :


 முந்திரி பருப்புகளில் அதிக அளவு லுடீன் மற்றும் பிற முக்கிய ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவை நம் கண்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன.


 ஆரோக்கியமான கண்பார்வையை உறுதி செய்வதால் வயதானவர்கள் தினசரி தேவையான அளவு முந்திரிகள் சாப்பிடுவதன் மூலம் குருட்டுத்தன்மை ஏற்படும் அபாயத்தை குறைத்து கொள்ளலாம் .


மேலும் கண்புரை வராமல் தடுத்து கொள்ளலாம். மேலும் முந்திரியில் காணப்படும் Zeaxanthin என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களில் உள்ள மாக்குலாவை பாதிப்பிலிருந்து பாதுகாக்க அவசியமான ஒன்று.


ஒற்றை தலைவலிக்கு :


 பொதுவாக மெக்னீசியம் பற்றாக்குறை பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் மெக்னீசியத்தின் அளவு சீராக இருக்க வேண்டும் என்றால் தினசரி சில முந்திரிகளை சாப்பிடலாம். முந்திரிகளில் நிறைந்திருக்கும் மெக்னீசியம் ரத்த நாளங்களை தளர்த்தி ஒற்றை தலைவலியின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.


கேன்சர் வராமல் தடுக்க : 


தொடர்ந்து முந்திரிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது கேன்சர் வருவதற்கான அபாயத்தை கணிசமாக குறைக்கிறது. முந்திரிகளில் Proanthocyanidins எனப்படும் ஒரு வகை ஃபிளாவோனால் இருக்கிறது. இது உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க கூடியது.


சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு :


 முந்திரிகளில் நிறைந்திருக்கும்அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் நல்ல கொழுப்புகள் அதிகம் அடங்கி இருப்பதால் குறிப்பிடத்தக்க இதய ஆரோக்கியத்துடன் முந்திரி நுகர்வு இணைக்கப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்க முந்திரி உதவுகிறது. மேலும் இதய செயல்பாட்டை அதிகரிக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

No comments:

Post a Comment