மிகவும் பயனுள்ள 27 வகையான கிச்சன் டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, March 28, 2024

மிகவும் பயனுள்ள 27 வகையான கிச்சன் டிப்ஸ்..!

 மிகவும் பயனுள்ள 27 வகையான கிச்சன் டிப்ஸ்..!


* உருளைக்கிழங்கு மசாலா தோசை செய்யும்போது தோசையில் மசாலா வைப்பதற்குமுன் தேங்காய் சட்னி இரண்டு ஸ்பூன் எடுத்து தோசையின் மேல் பரவலாக தேய்த்து பிறகு மசாலாவை வைத்து மூடி எடுத்தால் தனிச்சுவையாக இருக்கும்.


* ரசப்பொடிக்குப் பதில் சிறிது சாம்பார் பொடி, சிறிது மிளகு, சீரகத்தூள் சேர்த்து ரசம் தயாரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


* ரசத்தில் புளி குறைந்துவிட்டால் கைவசம் மாங்காய்ப்பொடி இருந்தால் போதும். கால் டீஸ்பூன் பொடி தேவையான புளிப்பைத் தரும்.




*கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ எதுவானாலும் கடலை மாவைச் சிறிது தூவி, 3 நிமிடம் கழித்து இறக்கினால் மணம் கமகமக்கும்.


*கோதுமை திரிக்கும்போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து திரித்துச் செய்தால் சப்பாத்தி, பூரி எதுவானாலும் சுவை, மணம் சத்து கூடும்.


* வெஜிடபிள் சாலட் செய்யும்போது நீர் அதிகமாகிவிட்டால் நாலைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போட்டால் சரியாகி விடும்.



*தோசைக்கு மாவு அரைக்கும்போது சிறிது சோயா பீன்ஸ் அல்லது சோயா பனீரையும் ஊற வைத்து அரைக்கவும். தோசை ருசியாக, மென்மையாக வரும். உடலுக்கும் நல்லது.


*கோவைக்காய் பழுத்துப் போய்விட்டால், வில்லைகளாக அரிந்து உப்பு கலந்த தயிரில் ஊற வைத்து, உலர வைத்து எடுத்து வைக்கவும். இதை வற்றல் குழம்பில் சேர்த்தால், குழம்பு ருசியாக இருக்கும்.


* காராமணி போன்ற பயறு வகைகளை வேக வைக்கும்போது, தண்ணீருடன் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.


* நுங்கை மிக்ஸியில் அரைத்து, அதில் பால் கலந்து, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து பருக கோடைக்கு இதமாக இருக்கும்.


* மைசூர்பாகு மொறுமொறுவென்று வர இறக்கும் போது ஒரு சிட்டிகை சோடா உப்பை போட்டால் பொங்கி வரும். அப்போது தட்டில் ஊற்றி துண்டுகள் போட்டால் கடையில் வாங்கியது போலவே இருக்கும்.


* கிழங்குகள் சீக்கிரம் வேக பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைக்கலாம்.


*முட்டைக்கோஸ் சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.


* வறுத்துப் பொடி செய்த வெந்தயப் பொடியை ரசம் கொதிக்கும் போது தூவி இறக்கினால், ரசம் சுவையாக இருக்கும்.


* வேர்க்கடலையை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும். கிரேவி வகைகள், சரியான பதத்தில் இல்லாமல் சிறிது நீர்த்து இருக்கும் போது, இரண்டு டேபிள்

ஸ்பூன் வேர்க்கடலை தூளைக் கலந்திட, கெட்டியாகவும் சுவையாகவும் கிரேவி இருக்கும்.


* பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்துக்கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். கொழுப்பையும் குறைக்கும்.


* பாயசம் செய்யும் போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க இதை வெறும் வாணலியில் வறுத்து பின் நெய் சேர்த்து வறுக்கலாம்.


எண்ணெய் பொங்காமலிருக்கசில டிப்ஸ்…


*எண்ணெய் காயும்போது, தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகள் செய்து அதில் போட்டால் பொங்கி வழியாது. மணமும் கூடும்.


*எண்ணெய் காய்ந்ததும் ஒரு வாழைப்பழத்தின் தோலை நறுக்கி போட்டு, கருகிய பின் எடுத்தால் பொங்காது.


*2, 3 கொய்யா இலைகளை நறுக்கிப்போட்டாலும் பொங்காது.


*சிறிது புளியை உருட்டி காயும் எண்ணெயில் போட்டு, பொரிந்ததும் எடுத்துவிடலாம்.


*எந்த எண்ணெய் வாங்கினாலும் தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். கசடு, தூசு, அழுக்கு போன்றவை கலந்திருந்தால் எண்ணெய் பொங்கும்.


*பால் பாயசம் செய்யும்போது பால் குறைவாக இருந்தால் ஒரு கரண்டி ஹார்லிக்ஸை சேர்த்தால் சுவையாக இருக்கும்.


*துவரம்பருப்பு வேக வைக்கும்போது தேங்காய்த்துண்டு ஒன்று போட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்!


*ஃப்ரிட்ஜில் இட்லி மாவு வைக்கும்போது உப்பு சேர்க்காமல் வைத்தால் புளிக்காது.


*பருப்பு வடைக்கு மாவு பிசையும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லியுடன் சிறிது அரைக்கீரையையும் பொடியாக அரைத்தால் வடை மிகச் சுவையாக இருக்கும்.


பச்சைப் பட்டாணி பக்கோடா


தேவையானவை:

பச்சைப் பட்டாணி – 1 கப்,

பச்சை மிளகாய் – 2,

மிளகாய் வற்றல் – 2,

கெட்டி அவல் – 1 கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,

பொடியாக நறுக்கிய ேகாஸ் – ஒரு கப்,

கொத்தமல்லித்தழை – சிறிது,

உப்பு, எண்ணெய் – தேவைக்கு.


செய்முறை: பச்சைப் பட்டாணி, கெட்டியான அவலை தனித்தனியே ஊறவைத்து பிழிந்து எடுக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயம், கோஸ், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான பட்டாணி பக்கோடா ரெடி.

No comments:

Post a Comment