11 நாட்களாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்:மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்திற்கு வரவழைப்பு
மாணவர்கள் நலன் கருதி, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்' என்ற அமைச்சரின் கோரிக்கையை, ஆசிரியர்கள் நிராகரித்து, 11வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
அரசு பள்ளிகளில், 2009, ஜூன் 1க்கு முன் சேர்ந்தவர்களுக்கு வழங்குவது போல, அதன்பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அடிப்படை ஊதியம் வேண்டும் என, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.
இந்த அமைப்பின் சார்பில், பிப்ரவரி 19 முதல், சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது. போராடும் ஆசிரியர்கள் தினமும் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்படுகின்றனர். நேற்று, 11ம் நாளாக போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், போராட்டத்தை கைவிட்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை ஆசிரியர்கள் நிராகரித்துள்ளனர். மாறாக, போராட்டம் இன்னும் தீவிரமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்கு ஆதரவாக, அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோரையும், நேற்று முதல் போராட்டத்துக்கு வரவழைத்துள்ளனர்.
No comments:
Post a Comment