கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Software Analyst
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்(ஐடி) பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Programmer Analyst
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்(ஐடி)பிஇ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director, Centre for Governance, Anna University, Chennai - 600 025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 19.2.2024
No comments:
Post a Comment