சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, February 29, 2024

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

 சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்


நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் பல நோய்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கின்றன. இதனால் நமது இனப்பெருக்க உறுப்புகள், சிறுநீர் பாதை ஆகியவை பாதிக்கபடுகின்றன. நம் நாட்டில் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


ஆண்களைப் பொறுத்தவரை ப்ரோஸ்டேட் சுரப்பியில் அதிக பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதனால் அவர்கள் சிறுநீர் கழிக்கும் முறையே முற்றிலும் மாற்றமடைகிறது. பெண்களைப் பொறுத்தவரை சிறுநீர் பாதை தொற்று மற்றும் பிறப்புறுப்பில் இறக்கம் போன்றவை ஏற்படும். இரண்டு பாலினத்தவரையும் பாதிக்கும் மற்றொரு பொதுவான பிரச்சனை சிறுநீரக கற்கள்.


அறிகுறிகள்:


சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறிகள் என்று பார்த்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை ஆகியவற்றில் கட்டி வளர்வது போன்றவற்றைக் கூறலாம்.


இதில் சில புற்றுநோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். இவை நமக்கு கடுமையான வலி மற்றும் அசௌகர்யத்தை கொடுப்பதால் அன்றாடை வேலைகளில் ஈடுபடுவது மிகுந்த சிரமத்தை கொடுக்கும். எனினும் தற்போதைய மருத்துவ சிகிச்சை முறையில் இந்நோயினை எளிதாக குணப்படுத்த முடியும்.


பொதுவாக சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆண்டிபயாடிக் பரிந்துரைக்கப்படும். ஆரம்ப நிலைக்கு அடுத்தகட்டத்தில் உள்ள சிறுநீரக கற்களுக்கு எண்டோஸ்கோபிக் சிகிச்சை தரப்படும். இதில் லேசர் கதிர்களை பயன்படுத்தி கற்களை உடைத்து வெளியேற்றுவார்கள். இதுவே கற்கள் பெரிதாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது ஒன்றே வழியாகும்.


சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்:


ஆரோக்கியமான உடல் எடை: சிறுநீரக நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். சரிவிகித டயட் மற்றும் சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை பராமரித்து சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.


சீரான உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த அழுத்த அளவை ஆரோக்கியமாக வைத்திருக்க முடிவதோடு இதய நலனையும் மேம்படுத்த முடியும். இது மறைமுகமாக சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும்.


சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது: டயாபடீஸ் நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், அது சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகும்.


புகை மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுதல்: அதிகமான புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருப்பவர்களின் சிறுநீரக செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என்பதே உண்மை. இது சிறுநீரக நோய்கள் வருவதற்கு காரணமாக அமையக்கூடும். ஆகவே இன்றே புகைப்பழக்கம் மற்றும் மது குடிக்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.


மனநல ஆரோக்கியம்: நாள்பட்ட மன அழுத்தம் நம் மனநிலையை மட்டுமல்லாமல் சிறுநீரக செயல்பாடு உள்பட ஒட்டுமொத்த உடல் அரோக்கியத்தையும் பாதிக்கும். மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இவை உங்கள் மனதை இதமாக்கி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.


நம்முடைய சிறுநீரகத்தின் நிலை மற்றும் அறிகுறிகளை புரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதோடு மட்டுமின்றி தடுப்பு நடவடிக்கைகளை மூலம் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும்.

No comments:

Post a Comment