பல அதிசய குணங்கள் நிறைந்துள்ள நெல்லிக்காயினை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா!
நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி என்றும் நம்மை இளமையாக இருக்க வழி செய்கிறது.
அன்றாட வாழ்வில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் கிடைக்கின்றதா? என்றால் நிச்சயம் இல்லை.
கடவுள் நமக்களித்த வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் நெல்லிக்காய். நரை, திரை, மூப்பு, பிணி நம்மை அணுகாமல் என்றும் இளமையாக இருக்க நெல்லிக்காயில் பல அதிசய குணங்கள் நிறைந்துள்ளன.
நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி என்றும் நம்மை இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
வேறு எந்த காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. சொல்லப்போனால் ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது. நெல்லிக்காய் ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடலுக்கு அளிக்கிறது. கண்களுக்குத் தெளிவைக் கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், அடர்த்தியாக வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.
அனைத்து வயதினரும் நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் தேனில் ஊற வைத்து கொடுக்கலாம். சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்களும், ரத்த அழுத்தத்தைச் சீராக்கவும் இது உதவும். இன்சுலின் அளவை அதிகப்படுத்தி சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சருமப் பிரச்னைகள் நீங்கி முகம் பொலிவு பெறும். அல்சரைக் குணப்படுத்தும், மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கும்.
என்ன தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் உடல் எடை குறைப்பது என்பது இப்போதுள்ள இஞைர்களிடம் பெரும் சவாலாக உள்ளது. இவர்கள் செலவே இல்லாமல் நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடித்துவந்தால் போதுமானது உடல் எடை குறைவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
ஒரே ஒரு பழத்தில் இவ்வளவு அதிசயமும், மகத்துவமும் உள்ளதென்றால்.. இதை நாம் நிச்சயம் நம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொண்டு பலன் பெறுவோம்.
No comments:
Post a Comment