நாள்பட்ட மூட்டு வலியையும் குணப்படுத்தும் முடக்கத்தானின் மருத்துவ பயன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, February 18, 2024

நாள்பட்ட மூட்டு வலியையும் குணப்படுத்தும் முடக்கத்தானின் மருத்துவ பயன்கள்

முதியோர்களின் நண்பனாக இருக்கும் முடக்கத்தான் கீரை பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது. வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் கொண்டுள்ளதாலேயே இது முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்ற பல பெயர்களையும் கொண்டுள்ளது.

இது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், மூச்சுத்திணறல் , சுவாசப்பாதையில் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு பலன் தருவதால் கேரளாவில் முடக்கத்தான் கீரை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

முதியவர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படக்கூடிய மூட்டுவலி பிரச்சனைக்கு முடக்கத்தான் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. முடக்கத்தான் கீரை பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர மூட்டு வலி, உடல் வலி குறையும்.

முடக்கத்தான் பொடியை முட்டை வெள்ளை கருவில் கலந்து நன்கு பேஸ்ட் போல் குழைத்து அதை வீக்கமுள்ள மூட்டு பகுதியில் தடவ வலி சற்று குறையலாம்.

பெண்களுக்கு கருப்பை பலமடைய கற்றாழை சதை மீது முடக்கறுத்தான் கீரை பொடியை தூவி சாப்பிடலாம்.

நீண்ட நாட்களாக மூல நோயால் அவதிப்படுகிறீர்கள் எனில் முடக்கத்தான் கீரையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க அதன் தீவிரம் குறையும்.

சளி, இருமலை உடனே போக்கும் பலன் முடக்கத்தான் கீரையில் உண்டு. எனவே முடக்கத்தான் கீரையுடன் , தூதுவளை கீரையும் சேர்த்து அரைத்து குழம்பு வைத்து சாப்பிட்டால் சரியாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முடக்கத்தான் கீரையில் இருக்கிறது. இது குறித்த தீவிர ஆய்வும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உடல் வீக்கம், வலியை குறைக்க உதவுகிறது. கல்லீரலை சுத்தப்படுத்தி அதன் வேலையை சிறப்பாக செய்ய உதவுகிறது.

புண், வீக்கம் இருப்பின் நல்லெண்ணெயில் முடக்கத்தான் கீரையை காய்ச்சி அதன் மேல் தினமும் தடவி வர விரைவில் ஆறிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த அவ்வப்போது முடக்கத்தான் கீரையில் தோசை, சூப், ரசம் வைத்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment