மாசி மகம்: நேரம், சிறப்பு, புராண வரலாறு மற்றும் வழிபடும் முறைகள்
மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாள் அன்று தான் பௌர்ணமி திதியும் தோன்றும். எனவே இந்த இரண்டு விசேஷங்களுமே ஒரே நாளில் ஏற்படும்.
2024 மாசி மாதம், மக நட்சத்திரம் என்று வருகிறது மாசிமகம் தேதி நேரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களும் திதிகளும் தனிச்சிறப்பு பெற்றுள்ளன.
அதேபோல பௌர்ணமி ஒவ்வொரு மாதமும் வந்தால் கூட ஒரு சில மாதங்களில் வரும் பௌர்ணமி விசேஷமானது.
அந்த வகையில் மாசி மாதம் வரும் முக்கிய விசேஷங்களில் மாசி மகம் மற்றும் மாசி பௌர்ணமி ஆகிய இரண்டுமே அடங்கும்.
மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாள் அன்று தான் பௌர்ணமி திதியும் தோன்றும். எனவே இந்த இரண்டு விசேஷங்களுமே ஒரே நாளில் ஏற்படும். 2024 மாசி மாதம், மக நட்சத்திரம் என்று வருகிறது மாசிமகம் தேதி நேரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மாசி மகம் 2024: தேதி மற்றும் நேரம்
மாசி மாதம் 2024 பௌர்ணமி பிப்ரவரி 24, சனிக்கிழமை அன்று வருகிறது. ஆனால் பௌர்ணமி திதி பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து தொடங்குகிறது.
மாசி மாதத்தில் மக நட்சத்திரம் பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தொடங்கி, பிப்ரவரி 24 சனிக்கிழமை இரவு 11 மணி வரை நீடிக்கிறது.
மக நட்சத்திரம் பௌர்ணமி திதியும் ஒன்றாக இணைந்து வரும் நாள்தான் மாசி மகம் ஆகும் எனவே இந்த நட்சத்திரம் மற்றும் திதி செயற்கையின் அடிப்படையில் மற்றும் சூரியன் உதயமாகும் பொழுது எந்த நட்சத்திரம் மற்றும் திதி இருக்கிறதோ அந்த நாளில் அதை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற என்பதன் அடிப்படையில் சனிக்கிழமை அன்று மாசி மகம் மற்றும் மாசி மாத பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வருகிறது.
சனிக்கிழமை மாலை வரை பௌர்ணமி திதியும் சனிக்கிழமை இரவு வரை மக நட்சத்திரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாசி மாதம் 2024 மகம் நட்சத்திரம் நேரம்:
பிப்ரவரி 23, 8.40 pm முதல் பிப்ரவரி 24, 11.05 pm வரை
மாசி மாதம் 2024 பௌர்ணமி திதி
நேரம்: பிப்ரவரி 23, 4.54 pm முதல் பிப்ரவரி 24, 6.51pm வரை
மாசி மகம் 2024 கொண்டாடும் தேதி:
பிப்ரவரி 24, 2024 சனிக்கிழமை
மாசி மகம் மற்றும் மகா மகம்:
மாசி மகம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை வரும் நிகழ்வாகும்.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சந்திர பகவான் மக நட்சத்திரத்தில் உதிப்பதை மாசிமகம் என்று கொண்டாடுகிறோம்.
மகாமகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நிகழ்வாகும்.
குருபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திர நாள் அன்று மகாமகம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் மகாமகம் என்றும், வட இந்தியாவில் கும்பமேளா என்றும் மிக விமரிசையாக கொண்டாடப்படும் விசேஷமாகும்.
புராணங்களில் மாசி மகம்
மாசி மாத மக நட்சத்திர நாளில் தான் பிரம்மஹத்தி தோஷம் தாக்கிய வருண பகவானுக்கு சிவபெருமான் விமோசனம் அளித்தார்.
கடலில் ஒளிந்திருந்த வருண பகவானை மீட்ட மாசி மாத நன்னாளன்று கடலில் நீராடுவது அனைத்து சாபங்களையும் போக்கும் என்பது ஐதீகம்.
தட்ச ராஜன் தனது மனைவி வேதவல்லியுடன் ஒரு முறை யமுனை நதியின் நீராட சென்றிருந்தான்.
அப்பொழுது தாமரை பூவில் வலம்புரி சங்கு ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் வலம்புரி சங்கை கையில் எடுத்த உடனே அது அழகான பெண் குழந்தையாக மாறியது.
சிவபெருமானே தனக்கு பெண் குழந்தையை வரப் பிரசாதமாக அளித்துள்ளார் என்று அந்த குழந்தைக்கு தாட்சாயணி என்று பெயரிட்டு வளர்த்தார்.
அம்பிகை அவதரித்த நாள் மாசி மாதத்தில் மக நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிபடும் முறை
இந்த நாளில் கடல், ஆறு, குளம் போன்ற ஓடும் நீர் நிலைகளில் நீராடுவது சகல தோஷங்களையும் போக்கவல்லது. செய்த பாவங்களுக்கு பாவ விமோசனம் பெற, மாசி மகம் அன்று புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவதும், புனித நீராடல் புரிவதும் நன்மைகளை அளிக்கும். மேலும் பித்ருக்களுக்கு உகந்ததாக இருப்பதால், நதி, கடல் போன்ற நீர்நிலைகளில் பித்ரு தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்யும்.
ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும் என்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். மாசி மகம் நட்சத்திரத்தன்று தான் முருகப்பெருமான் தன் தந்தைக்கு உபதேசம் செய்தார். ஆகவே முருகப் பெருமானையும் இந்நாளில் வழிபடுபவர்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
பெருமாள் வராக அவதாரம் புரிந்து பாதாளத்தில் சிக்கிக் கொண்டிருந்த பூமியை மீட்டெடுத்த நாளும் மாசி மகம் நட்சத்திரத்தன்று தான். எனவே பெருமாளை வழிபட்டாலும் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகவே இந்நாளில் புனித தீர்த்தங்களில் நீராடி, உபவாசமிருந்து குலதெய்வத்தையும், பித்ருக்களையும், இஷ்ட தெய்வங்களையும் என்ற அனைத்து விதமான வழிபாடுகள் செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆகவேதான் மாசிமகம் மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் விரதமிருந்து சிவன் கோவிலுக்கு சென்று தேவாரம், திருவாசகம் பாடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி செல்வ செழிப்பான சுகபோக வாழ்க்கை அமைவதாக ஐதீகம் உள்ளது. எனவே மாசி மக விரதத்தை தவறவிடாமல் பயன்படுத்தி பலன் பெறலாம்.
No comments:
Post a Comment