எந்த நேரத்தில் பால் அருந்தினால் அதிக சத்து கிடைக்கும்?
ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம் தான். ஆனால், அதைக் காட்டிலும் அதை எப்போது சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது. அதிலும் பால் நமக்கு அருமருந்து போல. நமக்கு நல்ல சத்தான உணவுப் பொருளாக பால் இருக்கிறது.
மனிதனின் வாழ்நாள் முழுவதுமே பால் அருந்தும் வழக்கம் தொடர்ந்து கொண்டே வருகிறது. தினசரி பால் சாப்பிட்டாலும், எந்த சமயத்தில் பால் குடித்தால் அதிக பலன் கிடைக்கும் என்ற ரீதியில் நாம் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அதிகாலை, மாலை, இரவு தூங்கும் முன்பாக பால் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. இது தவிர சூழ்நிலை அமைகின்ற எந்த தருணத்திலும் பால் அருந்த மறுப்பதில்லை.
எல்லா சமயத்தைக் காட்டிலும் மாலை நேரத்தில், அதாவது இரவு தூங்கச் செல்லும் முன்பாக பால் அருந்துவது தான் சிறப்பான பலன்களை தரும்.
பாலில் இயற்கையாகவே tryptophan என்னும் சத்து இருக்கிறது. இது ஒரு அமினோ அமிலம் ஆகும். நமக்கு தூக்கம் மற்றும் நிம்மதியை தருகின்ற செரடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய ஹார்மோன்களை இந்த அமினோ அமிலம் தூண்டுகிறது. மாலையில் பால் அருந்தினால் நமக்கு ரிலாக்ஸ் கிடைக்கிறது மற்றும் நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது.
பாலில் உள்ள சத்துக்கள் : பாலில் கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்துக்கள் இருக்கின்றன. அவை இரண்டுமே நம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானவை. மாலையில் பால் அருந்தினால் நம் உடல் இந்த சத்துக்களை துரிதமாக உறிஞ்சிக் கொள்ளும்.
அதேபோல பற்கள் வலுவாக இருக்கவும் கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்து அவசியமாகும். அதே சமயம் ஒவ்வொரு தனி நபருக்குமான ஊட்டச்சத்து பயன்பாடு மாறுபடலாம். லேக்டோஸ் எதிர்ப்புத்தன்மை கொண்ட நபர்கள் பால் எடுத்துக் கொள்ள முடியாது. அதுபோன்ற நபர்கள் பாதாம் அல்லது சோயா பால் எடுத்துக் கொள்ளலாம்.
எனினும் நாம் எந்த சமயத்தில் பால் அருந்துகிறோம் என்பதை பொறுத்துதான் நமக்கான சத்து கிடைக்கும். ஆனால், இரவு தூங்கச் செல்லும் நேரத்திற்கு முன்பாக, மாலை நேரத்தில் பால் அருந்துவதன் மூலமாகத்தான் நமக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும். பால் மட்டுமல்லாமல் பால் சார்ந்த மோர், தயிர், வெண்ணெய், நெய் போன்ற அனைத்துமே நமக்கு பலன் தரக் கூடியது தான்.
நீரிழிவு நோயாளிகள் பால் அருந்தலாமா : பாலை தனியாக காய்ச்சி அருந்துவதால் எந்தவித பக்கவிளைவுகளும் கிடையாது. ஆனால் பாலில் சர்க்கரை சேர்த்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அதிகரிக்கலாம். இருப்பினும் சர்க்கரை இல்லாமல் பால் மட்டும் எடுத்துக் கொண்டால் அதன் சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment