அமாவாசை தினத்தில் சமையலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கலாமா?
வெங்காயம் மட்டு மல்ல, அன்றைய தினம் பூண்டு சேர்ப்பதும் கூடாது என்ற வழிகாட்டல் உண்டு.
பொதுவாக வெங்காயம், பூண்டு போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. பல மருந்துகளில் மூலப் பொருளாகவும், துணைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
பல பிணிகளைப் போக்க வெங்காயம் பயன்படும் என்கிறது ஆயுர்வேதம்.
எனினும் வெங்காயத்தில் தாமஸ உணவின் குணம் உண்டு. தாமஸ உணவுகள் மன உற்சாகத்தைக் குறைக்கும்.
விரத வழிபாடுகளில் சிரத்தையோடு செயல்பட முடியாமல் போகும். பகவான் கிருஷ்ணரும் கீதையில் தாமஸ உணவுகளைத் தவிர்க்கச் சொல்கிறார்.
வேதம் ஓதுவோர், சாஸ்திரங்களைக் கையாளுவோர், ஆன்மிகப் பணிகளில் இருப்போரின் மன ஓட்டம் சுணங்காமல் இருக்க வேண்டும்.
எனவே இவர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனும் அறிவுறுத்தல்கள் உண்டு. ஆனால், இவற்றை உணவில் சேர்த்துப் பழகியவர்கள், உடனே விட்டுவிட முடியாது என்பதால், ‘அமாவாசை நாளிலாவது சேர்க் காமல் இருக்கலாம்’ என்றொரு நடைமுறை தோன்றியது.
நன்மையும் தீமையும் எல்லாப் பொருளி லும் கலந்தே இருக்கும். நன்மையை பெரிசு படுத்திப் புகழ்வதும் தீமையை சுட்டிக் காட்டி இகழ்வதும் சரியல்ல. உணவில் முதலிடம் வகிக்கும் வெங்காயத்தை, அகற்றுவது கடினம்; குறைத்துக்கொள்வது சுலபம்.
No comments:
Post a Comment