சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, February 12, 2024

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

 சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள  ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விளம்பர எண்: 03/2024


பணி: ஓட்டுநர்


காலியிடங்கள்: 13


சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900


வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 16 முதல் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர்18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி,பிசிஎம், எம்பிசி, டிசி பிரிவினர் ரூ.500. இதனை இந்தியன் வங்கி செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.2.2024


மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment