பேடிஎம் மீதான கிடுக்கிப்பிடிக்குக் காரணம் என்ன? முழு விவரம் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, February 5, 2024

பேடிஎம் மீதான கிடுக்கிப்பிடிக்குக் காரணம் என்ன? முழு விவரம்

 பேடிஎம் மீதான கிடுக்கிப்பிடிக்குக் காரணம் என்ன? முழு விவரம்


சரியான அடையாள ஆவணங்கள் இல்லாமல், ஆயிரக்கணக்கான கணக்குகளை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உருவாக்கியிருப்பது, ஆர்பிஐ தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டதே, அதன் மீதான கிடுக்கிப்பிடிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


அதாவது, சரியான ஆவணங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு, அதன் மூலம் யார்? யாருக்கு பணம் அனுப்புகிறார் என்ற விவரமே தெரியாமல், பல கோடி மோசடி நடந்திருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.


அதாவது, ஆயிரத்துக்கும் அதிகமான வங்கிக் கணக்கு பயனர்கள், ஒரே ஒரு நிரந்தர கணக்கு எண் என்று கூறப்படும் பான் எண்ணை அவர்களது வங்கிக் கணக்குடன் இணைந்திருக்கிறார்கள். இது, பேடிஎம் வங்கி சமர்ப்பித்த ஆவணங்களை இந்திய ரிசர்வ் வங்கி தணிக்கை செய்தபோது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, பேடிஎம் வங்கியில் உருவாக்கப்பட்ட கணக்குகள் பல போலியானவை என்றும், அவை பல பணமோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இது குறித்து உடனடியாக அமலாக்கத் துறைக்கும், மத்திய உள்துறை அமைசச்கத்துக்கும் தகவல் தெரிவித்திருக்கும் ரிசர்வ் வங்கி, விசாரணை நடத்தி, ஏதேனும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், பேடிஎம் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில்தான், பிப்ரவரி 29ஆம் தேதியுடன் பேடிஎம் பேமேன்ட்ஸ் தனது வங்கிச் சேவை சார்ந்த பணிகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதனால், பேடிஎம் பேமேன்ட்ஸ் வங்கி சேவை மூலம் எந்தப் பயனரும் எந்தக் கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment