எது உடல் பருமன்?உடல் பருமனைத் தீர்மானிக்க சில வழிகள் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, February 28, 2024

எது உடல் பருமன்?உடல் பருமனைத் தீர்மானிக்க சில வழிகள்

 எது உடல் பருமன்?உடல் பருமனைத் தீர்மானிக்க சில வழிகள்


எடையைக் குறைக்கும் எல்லா பொறுப்புகளும் உடற்பயிற்சிக்கு மட்டுமே உரியவை அல்ல. ஏனெனில், ஒரே நாளில் நீங்கள் குண்டாகி விடவில்லை. உடல் பருமன் என்பது தினம்தோறும் நீங்கள் செய்த தவறுகளால் படிப்படியாக உருவாகியுள்ளது.


கொஞ்சம் எடை கூடினால் முன்பெல்லாம் இவ்வளவு கவலைப்பட்டதில்லை. இன்று பருமன் என்பது மன உளைச்சலைத் தரக்கூடிய பிரச்னையாக மாறிவிட்டது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைக்க வைக்கும் பெரும் சிக்கலாகவும் வடிவெடுத்து நிற்கிறது. அது மட்டுமா... மக்களின் அந்தக் கவலையையும் பலவீனத்தை யும் பயன்படுத்தி, உடல் இளைக்கச் செய்வதாக உத்தர வாதம் தரும் போலி விளம்பரங்களும் வியாபாரங்களும் பெருகிவிட்டன.


எது உடல் பருமன்?


``பருமனைத் தீர்மானிக்க சில வழிகள் இருக்கின்றன. ஒருவரைப் பார்க்கும்போதே அவர் உடல் பருமனோடு இருக்கிறாரா, எடை குறைவாக இருக்கிறாரா என்பதை ‘விஷுவல் டயக்னாசிஸ்’ (Visual Diagnosis) முறையில் தோராயமாக கணிக்கலாம். இரண்டாவதாக, ஒருவரது உயரத்துக்கேற்ற எடையுடன் இருக்கிறாரா என்ற உடல்நிலைக் குறியீடு (Body Mass Index) முறையில் கண்டுபிடிக்கலாம்.


இந்தியர்களைப் பொறுத்தவரை சராசரியாக 18-க்குக் கீழ் இருப்பது எடை குறைவு என்றும், 23 வரை இருப்பது நார்மல் பி.எம்.ஐ எனவும், 25 வரை இருப்பது அதிக எடையுடன் இருப்பதாகவும் வரையறுக்கப்படுகிறது. இதில் 25-க்கும் மேல் பி.எம்.ஐ இருக்கும்பட்சத்தில் அதை உடல் பருமனாக கணக்கிட்டுக் கொள்ளலாம். மூன்றாவதாக, இடுப்புப்பகுதியின் சுற்றளவை (Waist circumference) அளவிடும் முறையிலும் பருமனைத் தெரிந்துகொள்ளலாம். இடுப்புப் பகுதியின் சுற்றளவை அளக்கும் சோதனையில் பெண்களுக்கு 80 செமீக்கு மேலும், ஆண்களுக்கு 90 செமீக்கு மேலும் இடுப்பின் சுற்றளவு இருந்தால் அது உடல் பருமன்.


நான்காவதாக, உடலில் எந்த அளவில் கொழுப்பு உள்ளது என்பதைக் கண்டறியும் பரிசோதனையும் உள்ளது. ஆண்களுக்கு 20 முதல் 23 சதவிகிதம் வரை உடலில் கொழுப்பு இருக்கலாம்.


23 சதவிகிதத்துக்கு மேல் இருப்பது அதிக எடை என்றும், 25-க்கும் மேல் கொழுப்பின் அளவு இருப்பது உடல் பருமனாகவும் வரையறுக்கப்படுகிறது. 


இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பெண்களுக்கு கொழுப்பு அதிகம் தேவை. இயல்பாகவே ஆண்களைவிட பெண்களுக்கு உடலில் கொழுப்பு (Body Fat) அதிகமாக இருக்கும். எனவே, ஆணுக்கான ஆரோக்கியமான கொழுப்பின் அளவு சராசரியாக 23 சதவிகிதம் என்று கணக்கிட்டால், பெண்ணுக்கு 30 சதவிகிதம் என்று சற்று கூடுதலாகக் கணக்கிட வேண்டும். இதற்கென மருத்துவரீதியாக சில அளவீடுகள் உள்ளன.

No comments:

Post a Comment