சிறுநீரக கற்களை கரைக்கும் பழம் மற்றும் இதன் மருத்துவ பயன்கள்
முலாம் பழத்தில் வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
முலாம்பழத்தின் மருத்துவ பயன்கள்
1. பசியின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் முலாம் பழத்தினை சாறாகவோ அல்லது பழமாகவோ எடுத்துக் கொண்டால் பசியை தூண்டும்.
2. எடை குறைப்பு – முலாம்பழம் கொழுப்பை கரைப்பதிலும், செரிமானத்தை அதிகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் இப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான எடை குறையும்.
3. மலச்சிக்கல் – டையூரிடிக் என்ற அமிலம் உள்ளதால் இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு வருகிறது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்தை சீர்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
4. சிறுநீரக கற்கள் – இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் வளர விடமால் செய்கிறது. மேலும் உடலில் நீரேற்றத்தை அதிகப்படுத்தி சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை அதிரடியாக வெளியேற்றுகிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகியிருந்தாலும், அதனை கரைத்து விடும் தன்மையை கொண்டது.
5. சிறுநீர் பாதை தொற்று – முலாம்பலத்தில் பீட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதால் சிறுநீரகத்தில் உள்ள கிருமிகளை அடியோடு அழிக்கிறது.
6. வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சரி செய்து சீர்படுத்துகிறது. இதனால் நெஞ்செரிச்சல், குடல் புண், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
7. முலாம் பழத்தில் பீட்டா கரோட்டின், ஜியாக்சாண்டின், லுடின் என்ற முக்கியமான ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. இவை கண் பார்வை குறைபாட்டை சரிசெய்து கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது.
8. முலாம் பழத்தை அரைத்து நேரடியாக தலை உச்சி மற்றும் தலைமுடியில் தேய்ப்பதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரித்து தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்கிறது.
9. வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
10. மேலும் இதய நோய் மற்றும் இதய நோயினால் ஏற்படும் பக்கவாதத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
No comments:
Post a Comment