சுவையான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
1 tbsp எண்ணெய்
1 tbsp நெய்
1 பிரியாணி இலை
1 பட்டை
3 கிராம்பு
3 ஏலக்காய்
1 பெரிய வெங்காயம் நீள் வாக்கில் நறுக்கியது
1 கைப்பிடி புதினா இலை
3 பச்சை மிளகாய்
1 tbsp இஞ்சி பூண்டு விழுது
¼ tbsp மஞ்சள் தூள்
½ tbsp மல்லி தூள்
1 tbsp கரம் மசாலா
1 tbsp மிளகாய் தூள்
¼ கப் கெட்டியான தயிர்
200 கிராம் பன்னீர் நறுக்கியது
1 கப் பாஸ்மதி அரிசி
1 ½ கப் தண்ணீர்
உப்பு தேவையான அளவு
1 கைப்பிடி கொத்த மல்லி
1 tbsp நெய்
செய்முறை
முதலில் ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசி
எடுத்து இரண்டு முறை தண்ணீரில் கழுவி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும்.
பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும்
அதனுடன் பிரியாணி இலை, பட்டை மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து கிளறி விடுங்கள்.
அதன் பின்பு நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்ததும் அதனுடன் மூன்று பச்சை மிளகாய் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாடை போகியதும் பின் இதனுடன் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதன் பின்பு இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கவும்.
பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளியும் நன்கு மசிந்து வந்ததும் கால் கப் அளவிற்கு கெட்டியான தயிர் ஊற்றி கிளறி விடவும்.
பின் இதனுடன் மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிய பன்னீரை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கிவிட்டு.
பின் இதனுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் கடைசியாக ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி வைத்து விடுங்கள்.
பின் குக்கரில் ஒரு விஷில் வரும் வரை வேக வைத்து இறக்கி கொள்ளுங்கள்.
பின் பிரஸர் குக்கரை இறங்கியதும் திறந்த பிரியாணியை பரிமாறிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான பன்னீர் பிரியாணி தயார்.
No comments:
Post a Comment