உலர் திராட்சையின் மருத்துவ பயன்கள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை. தினமும் 5 உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பழக்கத்தை கடைப்
பிடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
உலர் திராட்சை தரும் நன்மைகளை பார்ப்போம்:உலர் திராட்சைப் பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. வைட்டமின்களும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளதால் அமிலத் தொந்தரவு ஏற்படாது.ரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் உலர் திராட்சையை உட்கொண்டு வர ரத்த சோகை குணமாகும்.
தாமிரச் சத்துகள், ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.தினசரி இரண்டு வேளை உலர்திராட்சை சாப்பிட்டு வர காமாலை நோய் கட்டுப்படும். பசும்பாலுடன் காய்ச்சி ஆற வைத்து குடித்து வர, மலச்சிக்கல் சரியாகிவிடும். இதிலுள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும்.
குழந்தைக்கு பால் காய்ச்சும்போது அதில் இரண்டு பழத்தை நசுக்கிப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டி கொடுத்தால் தேகபுஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கட்டி இருந்தால் இரவு படுக்கப் போகும்போது 20 பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து போட்டு கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைக்கட்டு, கமறல் சரியாகும்.
உலர் திராட்சைப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் அரைமணிநேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய் கோளாறு நீங்கும். இதய நோய் தீரும். மாதவிடாய் கால வயிற்று, இடுப்பு, முதுகு வலிக்கு, வாணலியில் 20 திராட்சைப் பழத்தைப் போட்டு ஆழாக்கு நீர்விட்டு, 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து கஷாயம் செய்து 3 நாளைக்கு தினம் இருமுறை குடித்து வர வலி குணமாகும்.பச்சிளம் குழந்தைகள் மலம் சரியாக போகாமல் அவதிப்பட்டால், உலர்திராட்சை ஊற வைத்த தண்ணீரை சங்கில் ஊற்றி புகட்ட, வயிறு சுத்தமாகும்.
No comments:
Post a Comment