செரிமானத்தை சீராக்க உதவும் சில பானங்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, February 27, 2024

செரிமானத்தை சீராக்க உதவும் சில பானங்கள்!

 செரிமானத்தை சீராக்க உதவும் சில பானங்கள்!


இந்த வேகமாக உலகில், நமக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் தவிக்கும் நமது உடலுறுப்புகளில் முதன்மையானது செரிமான மண்டலம்தான்.


விதவிதமாகக் கிடைக்கிறது, தாய்லாந்து உணவு, கொரிய சாப்பாடு என எது கண்ணில் பட்டாலும் அதனை நேராக கபளீகரம் செய்து விடுகிறோம்.


இதன் பயனாக நமக்கு மனத்திருப்தி கிடைக்கிறது. ஆனால், நம் வயிறோ, எதைப் போட்டிருக்கிறான் என்று தெரியாமல், அதனை எப்படி செரித்துமுடிப்பது என்று தெரியாமல் சில வேளைகளில் குழப்பத்தில் அந்தப் பணியை அப்படியே விட்டுவிடுகிறது.


அதனால் ஏற்படுவதுதான் செரிமானக் கோளாறுகள். நமது ஊரில் விளையும் நமது தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுகளை நாம் உண்பதுதான் நமக்கும் நம் வயிற்றுக்கும் செய்யும் நல்லது. அதை விடுத்து அடிக்கடி வெளிநாட்டின் பாரம்பரியத்தைக் கொண்ட உணவுகளை சாப்பிட்டால், அது நமது செரிமானத்தை முற்றிலும் முடக்கிவிடக் கூடும்.


சில பானங்கள் செரிமானத்தை சீராக்க உதவுகிறது.


சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு சில மணி நேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்துக்குள் சில பானங்களை குடிப்பதால் செரிமானம் நன்றாக நடைபெறும் என்கிறார்கள்.


காய்கறி சூப்


சூப் என்பது பொதுவாகவே நன்கு பசியைத் தூண்டி செரிமானத்தை அதிகரிக்கும். அதில் போடப்படும் மிளகுக்கு அந்த வேலையை நன்றாகவே செய்யத் தெரியும்.


இஞ்சி டீ


இஞ்சி சேர்த்து போடப்படும் டீ அல்லது பிளாக் டீயை குடிப்பதால், சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் அடையும்.


ரசம்


சாப்பிட்டதும், சூடாக வைத்த ரசத்தை ஒரு டம்ளரில் ஊற்றி குடித்துப் பாருங்கள். எந்த செரிமானப் பிரச்னை இருந்தாலும் சரியாகிவிடும்.


எதுவும் இல்லையா. அதிக எண்ணெய் கொண்ட உணவுப் பொருளை சாப்பிட்டதும் சூடாக தண்ணீர் குடித்தாலோ ஜீரணப் பிரச்னைகள் சரியாகிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment