சூப்பரான 9 சமையல் டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, February 27, 2024

சூப்பரான 9 சமையல் டிப்ஸ்..!

 சூப்பரான 9 சமையல் டிப்ஸ்..!


குழம்பு வடகம் செய்யும்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புடன் காராமணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து விடுங்கள். அதை வடகமாக பொரித்தால் கர கரவென்று ருசியாக இருக்கும்.


ரசத்துக்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் 4, 5 முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணத்துடன் இருக்கும்.


வீட்டில் எந்த ஸ்வீட் செய்தாலும் அதில் சிறிது உப்பு கலந்தால் அதன் சுவை மேலும் கூடும்.


சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசைந்து, கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், மேல் பரப்பு காய்ந்து போயிருக்கும். இப்படி நேராமல் இருக்க, மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைக்கலாம். அல்லது ஈரத்துணியால் மூடி வைக்கலாம்.


நெய்யில் சிறு கட்டி வெல்லத்தை போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.


வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.


பத்து அல்லது பதினைந்து நெல்லை சுத்தமாக கழுவி விட்டு, காலையில் கறந்த பசும் பாலில் போட்டு வையுங்கள். இரவு வரைக்கும் பால் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.


கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்களை நறுக்கியவுடன் நீரில் போட்டு விடுங்கள். இல்லையெனில் அவற்றின் நிறம் மாறி விடும். நிறம் மாறினால் சுவை கெட்டு விடும்.

No comments:

Post a Comment