67 வகையான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணமிக்க மூலிகை...! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, February 28, 2024

67 வகையான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணமிக்க மூலிகை...!

 67 வகையான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணமிக்க மூலிகை...!


முருங்கைக் கீரையில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் முருங்கைக் கீரை உதவுகிறது.


வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது.


முருங்கைக்கீரை ஒரு மருத்துவ குணம்மிக்க மூலிகை. இதர கீரைகளைவிட அதிக அளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் அடங்கியுள்ளன. இது, முருங்கைக் கீரைக்கே உண்டான சிறப்பு அம்சமாகும். எனவே தான் முருங்கைக் கீரை சத்துப் பற்றாக்குறையை குணப்படுத்தும் உணவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற எந்த தாவர உணவிலும் முருங்கையில் இருப்பது போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் இல்லை. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.


செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட, முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.


ஒரு வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் அதாவது சுமார் 8 கிராம் உலர்ந்த முருங்கைக்கீரை பவுடர் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான 14 சதம் புரதச்சத்தும், 40 சதம் கால்சிய சத்தும், 23 கிராம் இரும்புச்சத்தும், தேவையான வைட்டமின் ஏ சத்தும் கிடைக்கும்.


முருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது.


இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.


ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக் கீரை இது. இக்கீரை மலிவானது மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும், அனைத்து காலங்

களிலும் கிடைக்கும்.


வெளிநாடுகளில் முருங்கை இலை உணவுகளை கர்ப்பிணி பெண்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு ஆரோக்கிய உணவாக பரிந்துரைக்கின்றனர்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக் கீரையை அன்றாட உணவில் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.

No comments:

Post a Comment