3 வகை நோய்களை குணப்படுத்தும் ஒரே மூலிகை - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, February 22, 2024

3 வகை நோய்களை குணப்படுத்தும் ஒரே மூலிகை

 3 வகை நோய்களை குணப்படுத்தும் ஒரே மூலிகை


வாதம், பித்தம், கபம் போன்ற நோய்களை ஒருசேர குணப்படுத்தும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. இந்த மூன்று நிலைகளிலும் ஏற்றம் இறக்கம் இருந்தால் அருகம்புல் சாப்பிட்டு வர இந்த நிலைகளைச் சமன் செய்யும்.


வில்வ மூலிகை வாத நோய்களைத் தீர்க்கும். வேப்பிலை பித்த நோய்களைச் சரிசெய்யும். துளசி கப நோய்களைக் குணப்படுத்தும். ஆனால் இந்த மூன்று வகை நோய்களையும் குணப்படுத்தும் ஒரு மூலிகை என்ன தெரியுமா? அதுதான் அருகம்புல். அதனால்தான் இதை முதல் மூலிகைண்ணு சொல்வாங்க... அருகம்புல் மட்டுமே ஒரு பெரிய ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் எனச் சொல்லலாம்.


கிராமங்களில், சாணத்தைக் கொஞ்சம் எடுத்துக் கூம்பு போல வைத்து பிள்ளையார் என வழிபடும் பழக்கம் உண்டு. கேள்விப்பட்டிருப்பீங்க… அதில் 4-5 அருகம்புற்களைச் சொருகி வைத்திருப்பார்கள். காரணம் என்ன தெரியுமா? அதில் புழு, பூச்சி வரகூடாது என்பதற்காக… அதாவது, அருகம்புல் புழு, பூச்சி உருவாகாமலோ, அருகில் வருவதையோ தடுத்துவிடும். அந்தளவுக்கு மருத்துவக் குணம் பெற்றது.


வாதம், பித்தம், கபம் போன்ற நோய்களை ஒருசேர குணப்படுத்தும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. இந்த மூன்று நிலைகளிலும் ஏற்றம் இறக்கம் இருந்தால் அருகம்புல் சாப்பிட்டு வர இந்த நிலைகளைச் சமன் செய்யும்.


கண் நோய், ரத்த பித்தம், தலைவலியை குணப்படுத்தும். நோய் வருவதற்கு முன்னரே அதைக் குணப்படுத்துவதற்கான பெயர், Preventive Medicine எனச் சொல்வாங்க. சித்தர்கள் பல ஆயிரம் முன்னே Preventive Medicine பற்றி அறிந்து, எழுதி வைத்திருக்கிறார்கள். எந்த நோயும் உருவாகுவதற்கு முன்னரே தடுத்துவிடும் இந்த அருகம்புல்.


சித்தர்கள் சொன்னது என்ன தெரியுமா?


அருகம்புல்லை ‘முன்நோய் ஒழிக்கும் முறை’ எனச் சொன்னார்கள். நோயை தடுத்துவிடுமாம். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்துவிடும் என்பதற்காகச் சித்தர்கள் அருகம்புல்லை முன்நோய் ஒழிக்கும் மூலிகை எனக் கூறுகின்றனர்.


வாதம், பித்தம், கபத்தைச் சரிசெய்து தலைவலியை முற்றிலுமான குணப்படுத்திப் புத்தியை கூர்மையாக்கும். கண் நோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்தும். உடலை ஆரோக்கியப்படுத்தும் இந்த அருகம்புல்.


அருகம்புல்லை எப்படிச் சாப்பிடலாம்?


அருகம்புல் blood pressure-ஐ கட்டுப்படுத்துவதில் மிக அருமையான மூலிகை.


சிலர் சொல்வாங்க, நான் அருகம்புல் 48 நாள் சாப்பிட்டேன் எனக்கு ஒன்னும் தெரியல என்று… முறைப்படி சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும்.


அருகம்புல் - ஒரு கைப்பிடி


மிளகு - 6


சீரகம் - ½ தேக்கரண்டி


மிளகு, சீரகம், அருகம்புல் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்து ஒரு கோப்பை சாறு எடுக்க வேண்டும். அந்த ஒரு கோப்பை சாறை வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறிவிடும்.


அருகம்புல் சாறு குடிப்பவர்களுக்கு இந்த விஷயம் நிச்சயம் தெரிந்திருக்கும். இந்தச் சாறு குடித்த அரை மணி நேரத்துக்குப் பிறகு மலம் முழுதும் வெளியேறும். கொஞ்சம் இளகலாக மலம் வெளியே வரும். பழைய மலம், கழிவு எல்லாம் வெளியேறிவிடும். மலம் நன்றாக உடலில் இருந்து வெளியேறினாலே உடலில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்கிவிடும். தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் எப்போதும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) கூடாது. உடல் ஆரோக்கியமாகும். அருகம்புல், ஒற்றை மூலிகை எனச் சொல்லும் அளவுக்கு மிகச் சிறந்த மருந்து.

No comments:

Post a Comment