இன்று (28-02-2024) சங்கடஹர சதுர்த்தி:வழிபடும் முறை மற்றும் கிடைக்கும் பலன்கள்
முழு முதல் கடவுளான விநாயகருக்கே உரிய சிறப்பு வாய்ந்த நாள் தான் இந்த சங்கடஹர சதுர்த்தி திதி.
இன்று 28.2.2024 (புதன்கிழமை ) சங்கடஹர சதுர்த்தி திதி.
வழக்கம் போல நீங்கள் இந்த சங்கடஹர சதுர்த்தி திதியில் விநாயகரை எப்படி வழிபாடு செய்தீர்களோ, அதை செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய சங்கடங்கள் எல்லாம் நிச்சயம் தீரும். இதோடு சேர்த்து பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டு முறையையும் கொஞ்சம் பின்பற்றி பாருங்கள். பணம் சம்பாதிக்க திறமையே இல்லாதவர்கள், இருந்த பணத்தை எல்லாம் அடுத்தவர்களை நம்பி ஏமாந்தவர்கள், அதிகமாக கடன் வாங்கி கஷ்டப்படுபவர்கள், அதிகமாக கடன் கொடுத்து கஷ்டப்படுபவர்கள் எல்லோருக்குமே இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் கை மேல் ஒரு பலனை கொடுக்கும்.
புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
புத்திகாரகன் புதன். இவன் சரியாக வேலை செய்தால் தான் திறமையாக எல்லா வேலையிலும் செயல்பட முடியும். திறமையாக இருந்தால் தானே பணமும் சம்பாதிக்க முடியும். நீங்க பணம் சம்பாதிக்க தேவையான தகுதிகளை பெற வேண்டுமா? காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். விநாயகரை நினைத்து உங்கள் விரதத்தை தொடங்குங்கள். இன்று புதனும் பிள்ளையாரும் சேர்ந்து இருக்கிறார்கள். இதனால் பிள்ளையாரை கும்பிட்டா புதனின் ஆசிர்வாதம் தானாக கிடைக்கும்.
இன்று மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள் தூள், கொஞ்சமாக சந்தனத்தூள், கொஞ்சமாக ஜவ்வாது, கொஞ்சம் பச்சை கற்பூரம் தூள், கொஞ்சமாக அருகம்புல் பொடி இதில் பன்னீர் ஊற்றி பிசைந்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து, வெற்றிலையின் மீது வைத்து, குங்குமப்பொட்டு வைத்து, இதற்கு மேலே ஒரு அருகம்புல் வைத்து பூஜை அறையில் வைக்கவும்.
இந்த வசிய சக்தி நிறைந்த பிள்ளையார் முன்பாக அமர்ந்து நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அப்படியே நடக்கும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் விநாயகரிடம் அந்த பிரச்சனைகளை முறையிடுங்கள். திறமையாக செயல்பட முடியாதவர்கள் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
எப்படியாவது கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கணும். எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடணும் என்று மனதார வேண்டிக் கொண்டால், உங்களுடைய வேண்டுதலை அந்த விநாயகப் பெருமான் அப்படியே நிறைவேற்றி வைப்பார். இந்த மஞ்சள் பிள்ளையாருக்கு அத்தனை வசிய தன்மை உண்டு. விநாயகருக்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நிவேதியம் வைத்து இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பிள்ளையார் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் வியாழக்கிழமை இந்த பிள்ளையாரை எடுத்து சுத்தமான தண்ணீரில் கரைத்து, கால் படாத மண்பாங்கான இடத்தில் ஊற்றுங்கள். உங்கள் வீட்டில் செடி இருந்தால் அந்த செடியிலேயே இந்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment