மிகவும் பயனுள்ள 17 சமையல் டிப்ஸ்
முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.
* அதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
* ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* மெதுவடைக்கு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.
* பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவை கலக்கும்போது சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும் கலக்க வேண்டும்.
* தேங்காய் எண்ணெய்யில் சுத்தமான உப்புக்கல்லை சிறிது போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.
* எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.
* பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் அவை விரைவில் பழுக்காது.
* வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை சேர்த்து பொரியல் செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.
* வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
* முருங்கை இலையை உருவிய பிறகு காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிடலாம். அது உடல், கை, கால் அசதிக்கு நல்லது.
* கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே மில்க்மெய்ட் ஊற்றி கிளறினால் அல்வா மணம், ருசியுடன் இருக்கும்.
* நெய் ஊற்றி ரவா லட்டு செய்த பின்பு தூய வெண்மை நிறம் கிடைக்க, சர்க்கரையை பொடித்து அதில் லட்டை புரட்டி எடுக்க வேண்டும்.
* கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவை அமோகமாக இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்த பின்பு மோர் மிளகாயை எண்ணெய்யில் பொரித்து பொடி செய்து தூவினால் சுவையாக இருக்கும்.
* பஞ்சாமிர்தத்துடன் ஒரு கப் பால் சேர்த்து ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் கொட்டி கிளறி தட்டில் கொட்டி துண்டுகளாக்கினால் பஞ்சாமிர்த பர்பி ரெடி.
* உளுந்து வடை செய்யும்போது 2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment