உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, January 13, 2024

உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

 உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?


வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதைவிட, ஊட்டச்சத்துக்கள் கலந்த சமச்சீர் உணவை உட்கொண்டால் உடலின் செயல்திறன் மேம்படும். உடற்பயிற்சி செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இவை உடலுக்கு போதிய ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் செரிமானமாகக்கூடிய சிற்றுண்டியையும் சிறிதளவு சாப்பிடலாம்.


தவிர்க்க வேண்டிய உணவுகள்


உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவை உடலுக்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். இதனால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும். எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிட்டாலும் இத்தகைய பிரச்சினையை உண்டாகும். உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் அவசியமானது. அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். தாகமாக இருந்து, அதிக தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது.


உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டியவை:


உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம். அப்படி உடற்பயிற்சி செய்யும்போது உணவுகளின் மூலம் ஆற்றலை பெறுவதற்கு பதிலாக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடல் பயன்படுத்திக்கொள்ளும்.


அத்துடன் புரதங்களையும் பயன்படுத்திக்கொள்ளும். அதனை ஈடுசெய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வது அவசியமானது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்களை தவிர்த்து இலகுவான உடற்பயிற்சி செய்பவர்கள் சிறிதளவு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பயிற்சியை தொடங்குவது உடலுக்கு ஆரோக்கியமானது.

No comments:

Post a Comment