வாதநோய்களுக்கான அறிகுறிகளும் அதற்கான சித்த மருந்துகளும்!
'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்' என்பது வாத நோய்களில் ஒன்றாகும். சித்தமருத்துவத்தில் 85 வகை வாத நோய்களை சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நோயில் முதுகில் உள்ள முதுகெலும்புகள் இடைவெளியின்றி ஒன்றாக இணைகின்றன. இதனால் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சிலநேரங்களில் விலா எலும்புகளும் பாதிக்கப்படலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும்.
அறிகுறிகள்:
நோயின் முக்கிய அறிகுறி முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு (சாக்ரோலியாக் மூட்டுகள்) இடையே உள்ள மூட்டுகளில் வீக்கம் காணப்படும். இந்த வீக்கம் முதுகெலும்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். இதனால் முதுகு அல்லது பிட்டத்தில் கடுமையான வலி காணப்படும். காலை நேரங்களில் வலி அதிகமாவது அல்லது வலியினால் இரவில் தூக்கம் வராமல் வேதனைப்படுவது போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்.
குதிகாலின் பின்புறம் தசைநார்கள் இணைக்கும் இடங்களில் வலி, நடப்தில் சிரமம் போன்ற பாதிப்புகளும் இருக்கலாம். இந்தநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் HLA-B27 மரபணு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மரபணு இல்லாதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.
சித்த மருத்துவம்:
இந்த நோய்க்கு சிறந்த சித்த மருந்துகள் உள்னை. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம்.
1. சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கிட குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளுடன் அமுக்கரா' சூரணம் 1 கிராம் சேர்த்து காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
2 கந்தி மெழுகு 500 மி.கி.கலை. இரவு இருவேளை சாப்பிட வேண்டும். வலியுள்ள இடங்களில் விடமுட்டி தைவம் உளுந்து தைலம், கற்பூராதி தைலம் சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
3. உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சில மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து விட்டு மீண்டும் உட்கார வேண்டும். முதுகெலும்பு வளையாமல் நேர்பட உட்காருவது நல்லது.
No comments:
Post a Comment