முகம் பொலிவு பெறவும்,பளிங்கு போல பளிச்சிடவும் என்ன செய்ய வேண்டும்? எளிமையான பியூட்டி டிப்ஸ்!
நம் சருமத்தை மாசு மருவில்லாமல் பளிச்சென வைத்துக்கொள்ள வீட்டிலேயே க்ளென்சர், ஃபேஸ் பேக் மற்றும் சீரம் போன்றவற்றை எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
முகத்தின் அழுக்கை நீக்க க்ளென்சர்
`கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ ஆயில் ஆகிய மூன்றையும் தேவைப்படும் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து ஒரு க்ளென்சர் போல பயன்படுத்தலாம். இந்த க்ளென்சரை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டுவைத்துக்கொண்டால், ஒரு மாதம்வரை கெடாமல் இருக்கும். ஃபேஸ் வாஷ் செய்ய இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
க்ளென்சரைப் பயன்படுத்தும் முறை
க்ளென்சரை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுங்கள். பின்னர் முகத்தைத் தண்ணீர் தொட்டுத் துடைத்திடுங்கள். இப்படிச் செய்யும்போது முகம் மிகவும் க்ளியராக இருக்கும். முகத்தில் இருக்கும் அவ்வளவு அழுக்கும் நீங்கியிருக்கும்.
ஃபேஸ் பேக் செய்ய ரெடியா?!
தேவையான பொருள்கள்: கார்ன் ஸ்டார்ச் (இது முகத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுவதோடு முகச்சருமம் தளர்ந்துவிடாமல் டைட்டாக இருப்பதற்கும் உதவும்), கற்றாழை ஜெல் (சருமத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவும்), எலுமிச்சைச் சாறு (சருமத்தைப் பளிச்சிட வைக்கும்), விட்டமின் ஈ எண்ணெய் (சருமத்தை ஊட்டச்சத்துடன் வைத்திருக்க உதவுவதோடு முகத்தைப் பொலிவாக்க உதவும்)... இவற்றை எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை: கார்ன் ஸ்டார்ச் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், இரண்டு வைட்டமின் ஈ எண்ணெய் கேப்சூல் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், ஃபேஸ் பேக் போல முகம் முழுக்க அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்கு விடவும். தளர்ந்த சருமத்தை இது இறுக்க ஆரம்பிக்கும். காய்ந்ததும் தண்ணீரைத் தொட்டுத் தொட்டு முகத்தில் மசாஜ் போலச் செய்து பேக்கைத் துடைத்து எடுக்கவும்.
இப்படிச் செய்வதால் முகம் டைட்டாகவும் க்ளியர் ஸ்கின்னாகவும் மாறும். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பளிங்குபோல மாறும்.
சீரம் தயாரிப்பு முறை
வீட்டிலேயே சீரம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் - கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ எண்ணெய் கேப்சூல், தேங்காய் எண்ணெய் (சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க உதவுவதோடு, சருமம் பொலிவு பெற உதவும்), பாதாம் எண்ணெய் (சருமத்திற்கு நல்லதொரு ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.)
செய்முறை: ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஒரு வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்துக்கொண்டால் ஒரு மாதம்வரை கெடாமல் இருக்கும்.
இரவில் இந்த சீரத்தை ஒரு துளி எடுத்து முகத்தில் அப்ளை செய்து ஒரு மசாஜ் கொடுக்கவும். பின்னர் உறங்கச் செல்லலாம். வாரம் ஒருமுறை இதுபோலச் செய்யும்போது முகச்சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைந்து, க்ளியர் ஆகும். முகம் பொலிவடைவதோடு பளிச்சென்றும் பிரகாசிக்கும்.’’
பார்ப்பவர்கள் கண்கள் கூசட்டும்!
No comments:
Post a Comment