யுபிஐ பணப் பரிவர்த்தனை செயலி பயனாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகள்
யுபிஐ பணப் பரிவர்த்தனை செயலி பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எண்ம(டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை முதல் நகைக் கடைகள் வரை கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் யுபிஐ செயலிகள் மூலம் 8,300 கோடி முறை ரூ. 1.39 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2024 முதல் ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
1. ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கு ‘யுபிஐ ஐடி’க்களை செயலிழக்கச் செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
2. பண மோசடிகளை தடுக்க ரூ. 2,000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணிநேரம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
3. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனையின் உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
4. யுபிஐ வேலட் அல்லது ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ரூ. 2,000-க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
5. யுபிஐ மூலம் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.
மேலும், ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களில் ‘க்யூஆர் கோட்’டை ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment