பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா? செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார்.
இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்குவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டி நிகழ்ச்சியின் அழைப்பிதழை வழங்க நாளை பிரதமரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment