வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகள் அறிவிப்பு
வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிராட்காஸ்டிங் அம்சம் சேனல்ஸ்-இல் புதிய வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் அதன் ஃபாளோயர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சம் தான் வாட்ஸ்அப் சேனல். இதில் தற்போது கூடுதலாக புதிய வசதிகள் வழங்குவதை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி வாட்ஸ்அப் சேனலலில் வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி வாட்ஸ்அப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்களின் உறுப்பினர்கள் இடையே கருத்து கேட்க வாக்கெடுப்பு நடத்த முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப் சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் வாட்ஸ்அப் சேனல் அப்டேட்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஒரே சேனலில் பலரை அட்மின்களாக வைத்துக் கொள்ளும் வசதியும் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, அதில் பல்வேறு புதிய வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment