சுவையான மட்டன் சுக்கா செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 17, 2024

சுவையான மட்டன் சுக்கா செய்வது எப்படி?

 சுவையான மட்டன் சுக்கா  செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்


வேக வைக்க ஆட்டுக்கறி – தேவைக்கேற்ப


மஞ்சள் தூள்


இஞ்சி பூண்டு பேஸ்ட்


உப்பு மிளகு


சீரகம் மல்லி காய்ந்த மிளகாய்


வறுவல் செய்ய தேவையானவை


நல்லெண்ணெய்


காய்ந்த மிளகாய்


பிரிஞ்சி இலை


பட்டை சோம்பு


கருவேப்பிலை சின்ன வெங்காயம்


இஞ்சி பூண்டு பேஸ்ட் – சிறிதளவு


மிளகாய் பொடி மல்லி


பொடி கல் உப்பு


செய்முறை


ஆட்டுக்கறியை முதலில் சுத்தமான நீரில் அலசிக்கொள்ள வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.


இதோடு, மட்டன் சுக்கா செய்யத் தேவையான மசாலாவை செய்து விடலாம். மல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், இறுதியாக மிளகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து தனியாக ஆற வைத்துக்கொள்வோம்.


அவை ஆறிய பிறகு அவற்றை நொறுநொறுப்பாக அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்வோம். இப்போ சுக்கா வறுவல் செய்ய ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை, பட்டை , சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை கொண்டு நன்கு கிளறவும்.


பின் தேவையான அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியி பிறகு சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கவும்.


அதனோடு மிளகாய் பொடி, மல்லி பொடி, கல் உப்பு போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.


இவை நன்கு கொதித்து வந்ததும் முன்னர் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். அவற்றை நன்கு கிளறி விட்டு சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். அவை சுண்டி வந்ததும் முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை மட்டன் மீது தெளித்து விடவும்.


நன்கு கிளறி மீண்டும் சுண்ட விடவும். இப்போது சுவையான மட்டன் சுக்கா ரெடி.. கீழே இறக்கும் போது அவற்றின் மீது கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்க்கவும்.

No comments:

Post a Comment