பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, January 12, 2024

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

 பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள்!


பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரில் 2,40,000 க்கும் அதிகமான பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக ஒரு லிட்டர் தண்ணீரில் முந்தைய கணக்கீட்டைவிட அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தகவல்தான் என்றபோதிலும், தேசிய அறிவியல் அகாதமி இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சித் தரவுகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. 


இதுவரை மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில் நானோ (Nano) அளவிலான பிளாஸ்டிக் துகள் அதிக எண்ணிக்கயில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இந்த மிக மிக நுண்ணிய துகள்களால் மனித செல்லிற்குள்ளும் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 


கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் எஸ்ஆர்எஸ் (SRS microscopy) எனும் புதிய வகை நுண்ணோக்கி தொழில்நுட்பம் மூலம் பிரபல குடிநீர் விற்பனையாளர்களின் பாட்டில் தண்ணீரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


மனிதர்களின் உடல் உறுப்புகளிலும் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த நுண்ணிய துகள்கள், ஜீரணக்கோளாறு, உணவுகளில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றையும் கர்பிணிப்பெண்களின் சிசுவின் உடலுக்குள்ளும் இவை செல்லும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் உணவுப் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்படும் உணவுப் பொருள்கள் மூலமும் இந்த நுண்துகள்கள் உடலுக்குள் புகுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment