புதினாவின் அற்புதமான மருத்துவ பயன்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, January 13, 2024

புதினாவின் அற்புதமான மருத்துவ பயன்கள்!

 புதினாவின் மருத்துவ பயன்கள்!


புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவற விடமாட்டீர்.


 புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளன. 


சட்னி, ஜூஸ் என எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். அவை உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது.


ரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும், பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.


வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.


புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.


மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment