மார்கழி மாத கோலம்:சில பயனுள்ள குறிப்புகள் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 1, 2024

மார்கழி மாத கோலம்:சில பயனுள்ள குறிப்புகள்

 மார்கழி மாத கோலம்:சில பயனுள்ள குறிப்புகள்


மார்கழி மாதமென்றால் வாசலில் வண்ணக் கோலங்கள் இடுவது இன்றும் வழக்கமாக உள்ளது. கிராமங்கள் மட்டுமில்லாமல் நகர்புறத்திலும் மார்கழி மாதம் முழுதும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோலங்கள் பளிச்சிடுவதை காண முடியும்.


*மாக்கோலமிட மாவு அரைக்கும் போது சோற்றுக் கஞ்சி சிறிது கலந்தால் கோலம் பளிச்சென்று இருக்கும்.


* சுண்ணாம்புப் பொடியுடன் மஞ்சள் பொடி கலந்து சிறிது நீர் விட்டுக் கரைத்தால் கோலத்துக்கு கரைகட்ட காவி தயார்.


* சலித்த கோலப்பொடியுடன், மைதா மாவு கலந்து கோலக் குழாயில் நிரப்பி கோலம் போட்டால் குழாய் சீராக உருளும்.


* கோலமாவுடன் பச்சரிசி மாவு கலந்தால் கோலம் வெண்மையாக, பளிச்சென்று இருக்கும்.


* பச்சரிசியை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, தாம்பாளத்தில் கொட்டிக் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது நீரில் அந்தப்

பொடியைக் கரைத்து அழகான மாக்கோலம் போடலாம்.


* கோலம் போட்டதும், செம்மண் அல்லது காவியை ஓரங்களில் மட்டும் (அ) நடுவில் கூட பூசலாம்.


* வாசல் மரப்படியை செம்மண் பூசிவிட்டு, கோலம் போட்டால் பளிச் சென்றும் இருக்கும். மணமும் வீசும்.

No comments:

Post a Comment