கைப்பேசியில் *401# எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டாம்!தொடர்பு கொண்டால் என்னவாகும்? எச்சரித்த மத்திய அரசு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, January 16, 2024

கைப்பேசியில் *401# எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டாம்!தொடர்பு கொண்டால் என்னவாகும்? எச்சரித்த மத்திய அரசு

 கைப்பேசியில் *401# எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டாம்!தொடர்பு கொண்டால் என்னவாகும்? எச்சரித்த மத்திய அரசு


அண்மையில், பொதுமக்களுக்கு மத்திய அரசு *401# எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தலை வெளியிட்டிருந்தது. அவ்வாறு அழைத்தால் என்னவாகும்?


ஒருவர் தங்களது கைப்பேசியிலிருந்து *401# என்று டயல் செய்தால், அந்த கைப்பேசிக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் இது செயல்படும்.  அதாவது, நமக்குத் தெரியாத ஒரு எண்ணுக்கு, நமது கைப்பேசிக்கு வரும் அழைப்புகளை கால் ஃபார்வேடு செய்வதாகும்.


இதன் மூலம் மோசடியாளர்கள் நமக்கு வரும் அழைப்பு அவர்கள் கைப்பேசியில் பெற்று பல மோசடிகளில் ஈடுபடலாம்  என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறையும் தெரிவித்துள்ளது.


தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதிநிதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.


இந்தப் பிரச்னையை சரி செய்ய ‘401’-ஐ தொடா்ந்து அவா்கள் கூறும் கைப்பேசி எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனா்.


இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா். இதில் என்ன மோசமான விஷயம் என்றால், அன்கன்டீஷனல் என்பது போல எந்த ஒரு விதியும் இல்லாமல் அனைத்து அழைப்புகளும் கால் ஃபார்வர்டு செய்யப்படும் என்பதே.


அதாவது, தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவது போல அழைத்து, ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து அதனை டயல் செய்து கூடுதலாக *401# என டயல் செய்யச் சொல்கிறார்கள். இதனை செய்ததும், நமக்கு வரும் ஓடிபியும், மோசடியாளர்களின் கைப்பேசிக்குத்தான் செல்லுமாம்.


இந்நிலையில், இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘401’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை. அவ்வாறு டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்னதான் செய்ய வேண்டும்?


முன்பின் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை கூடுதல் எச்சரிக்கையுடன் கையாளுங்கள். இதுபோன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்று வரும் அழைப்புகளின்போது, அவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக செய்ய வேண்டாம்.


மத்திய அரசு, காவல்துறை, சைபர் பிரிவு போன்றவை அவ்வப்போது வெளியிடும் எச்சரிக்கை செய்திகளை அறிந்துவைத்துக் கொள்ளங்கள்.


ஒரு முறை ஏதேனும் சந்தேகத்துக்குரிய அழைப்புகள் வந்தால், உடனடியாக அது தொடர்பாக புகார் அளிக்க மறக்க வேண்டாம்.


இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ளும் போது அதனை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment