வாட்ஸ்ஆப் செயலியில் புதியதொரு சேவை அறிமுகம்
வாட்ஸ்ஆப் செயலியில் புதியதொரு சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன்படி ஆடியோ குறுஞ்செய்திகளையும் இனி ஒன் டைம் வியூ (One time view) மூலம் அனுப்பும் புதிய வசதியை அளிக்கவிருக்கிறது.
கடந்த 2021-ல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளுக்கு 'ஒன் டைம் வியூ' எனும் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் வசதியை அறிமுகம் செய்தது. இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் அறிமுகப்படுத்துகிறது மெட்டா நிறுவனம்.
இந்த வசதியை இன்னும் சில நாள்களில் புதிய அப்டேட் மூலம் அனைவரும் பயன்படுத்தலாம் என மெட்டா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment