சுவையான எள் சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
1 கப் சாதம்( 200 கிராம் அரிசி அளவு)
அரைப்பதற்கு
2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
1 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்
2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
½ டேபிள் ஸ்பூன் சீரகம்
தாளிப்பதற்கு
1 டேபிள் ஸ்பூன் கடுகு
1 டேபிள் ஸ்பூன் எண்ணைய்
(தேவைக்கேற்ப)
1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுந்து
காய்ந்தமிளகாய் தேவையான அளவு
பெருங்காயத்தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் சாதத்தை உதிர் உதிராக வடித்தெடுத்து ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு நன்றாக ஆறவிடவும்.
பிறகு வாணலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அதனுடன் எள் சேர்த்து வெடித்ததும் இறக்கி ஆறவைத்துப் பொடித்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலில் எண்ணைய் விட்டு கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, போட்டு சிவந்ததும், காய்ந்தமிளகாயை தேவைக்கேற்ப கிள்ளி போடவும்.
இதனுடன் கருவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளரி விட்டு வதக்கி கொள்ளவும்.
பின் உதிராக வைத்துள்ள சாதத்தையும் போட்டு தீயை குறைவாக வைத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள எள் பொடியை சேர்த்து கலந்து, சாதம் நன்கு சூடேறியதும் இறக்கி பரிமாறவும்.
No comments:
Post a Comment