ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு:ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மிக்ஜம் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் டிச.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநா் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் ஜன. 7-ஆம் தேதி நடைபெவுள்ளது. மொத்தம் 2,582 காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் தோ்வுக்கு ‘டெட்’ தோ்ச்சி பெற்ற பட்டதாரிகள் நவ. 1 முதல் டிச. 7 வரை இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மிக்ஜம் புயல் தாக்கம் மற்றும் உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் டிச. 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அவற்றை டிச. 14, 15-ஆம் தேதிகளில் மேற்கொள்ள தோ்வு வாரிய இணையத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment