பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு
பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் இந்திய மொழிகள் உற்சவம் பெயரிலான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மகாகவி பாரதியார் பிறந்தநாளை (டிச.11) முன்னிட்டு அன்றைய தினம் வரைஅனைத்துப் பள்ளிகளிலும்இந்திய மொழிகள் உற்சவம் என்ற பெயரில் 11 வகையான செயல்பாடுகளை மேற்கொள்ள மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய மொழிகள் உற்சவ செயல்பாடுகளில் பாரதியாரின் மூலக்கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளை வாசித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என பல்வேறுசிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிகளில் இந்திய மொழிகள் உற்சவ செயல்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment