சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில வகை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில வகை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இந்திய கணினி அவசரநிலைப் மீட்புக் குழு (சிஇஆர்டி-இன்), ஆண்ட்ராய்டு பதிப்பு 11, 12, 13 மற்றும் 14ஐக் கொண்ட சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த வகை மாடல் செல்போன்களில், பல்வேறு வகையான பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதாக புகார்கள் வந்திருப்பதாகவும், செல்போனில் இருக்கும் பாதுகாப்பு வளையங்களை, ஊடுருவல்காரர்கள் எளிதாகக் கடந்துசெல்ல இந்த வகை மாடல் செல்போன்களில் வசதி இருப்பதாகவும், இதனால், செல்போனில் இருக்கும் மிக முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயமிருப்பதாகவும் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதாகவும் சிஇஆர்டி-இன் தெரிவித்துள்ளது.
இதுபோல, செல்போன் மீது தாக்குதல் நடத்தி ஊடுருவது எளிமையாக இருந்தால், ஹேக்கர்கள் அதனை வெற்றிகரமாகப் பயன்படுத்தி இந்த வகை மாடல் செல்போன்களை ஊடுருவுவது அதிகரிக்கும். இதனால் மோசடிகளும் அதிகரிக்கும். இந்த வகை மாடல் செல்போன்களில் இருக்கும் சிம் மற்றும் பின் எண்ணை ஹேக் செய்வது, செல்போனை ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, தங்களுக்கு சாதகமான செயலிகளை பதிவிறக்கம் செய்வது, செல்போனுக்கு வரும் தகவல்களை படிப்பது, பல செக்யூட்டிகளை தடைகளைக் கடப்பது, ஊடுருவல்காரர்கள், செல்போனில் இருக்கும் கோப்புகள், முக்கியமான தகவல்களை திருடுவது, தங்களே செல்போனை இயக்குவது, என பல மோசமான விஷயங்களை செய்ய முடியும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனாளர்கள், தங்களது செல்போனுக்கு வரும் ஆபரேடிங் சிஸ்டம் அப்டேட்களை உடனடியாக அப்டேட் செய்துகொள்ளுங்கள். மாதாந்திர பாதுகாப்பு பராமரிப்பு வெளியீட்டு (SMR) செயல்முறையின் ஒரு பகுதியாக, முக்கிய ஃபிளாக்சிப் மாடல்களுக்கான பராமரிப்பு வெளியீட்டை வெளியிடுவதாக பாதுகாப்பு அப்டேட் குறித்து சாம்சங் மொபைல் கூறியுள்ளது. இந்த பாதுகாப்பு பராமரிப்பு வெளியீடானது ஆனது கூகுள் மற்றும் சாம்சங் இரண்டுக்குமான திரட்டுகளைக் கொண்டிருக்கும்.
No comments:
Post a Comment