கிறிஸ்துமஸ் ஸ்டார் எதற்காக வீடுகளில் தொங்கவிடப்படுகிறது?
இயேசு பிறந்தபோது, பெத்லகேம் வயல்வெளியில் இருந்த இடையர்களுக்கு தோன்றிய வானதூதர், இதோ, எல்லா மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று ஆண்டவராகிய மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அவருடன் சேர்ந்து, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! என்று கடவுளைப் புகழ்ந்து, வானதூதர்கள் பாடிய இந்த பாடலே முதல் கிறிஸ்துமஸ் கீதம் ஆகும்.
இதை பின்பற்றி இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்துமஸ் கீதங்களை ஆலயங்களில் பாடும் வழக்கம் 4ம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. தெருக்களில் கிறிஸ்துமஸ் கீதங்களை[ பாடும் வழக்கம் அசிசி புனித பிரான்சிசால் 13ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் வானியலில் சிறந்து விளங்கிய பெர்சிய மத குருக்களான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது கிறிஸ்தவ மரபு.
பெத்லகேமின் நட்சத்திரம்
இந்த நட்சத்திரம் பெத்லகேமின் நட்சத்திரத்தை குறிக்கிறது மற்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. பைபிளின் கதையின்படி, கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தான் மூன்று ஞானிகளை குழந்தை இயேசுவிடம் வழிநடத்தியது.
மூன்று ஞானிகளும் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் வரை சென்றனர், அது இயேசு பிறந்த இடத்திற்கு மேலே நின்றது. நட்சத்திரம் மனிதகுலத்தின் நம்பிக்கையின் சின்னமாகவும் உள்ளது.
அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.
16ம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாகவே அனைவரது வீடுகளிலும் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும். இது எதற்காக கட்டப்படுகிறது என்பது குறித்து பலரும் அறியாமல் இருக்கலாம்.
அதாவது அரேபிய நாடான சிரியா நாட்டை சேர்ந்த வான சாஸ்திரிகள் இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அந்த புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது.
No comments:
Post a Comment