சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாக மலைப் பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிட அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் குங்குமப்பூ அழகுப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?
குங்குமப்பூவை பால் அல்லது தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
குங்குமப்பூ வயதான தோற்றத்தைத் தவிர்க்கப் பயன்படுகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை, வடுக்களைப் போக்குகிறது.
இதில் உள்ள குரோசின், குரோசேட்டின் ஆகியவை சருமத்திற்கு நிறமளிக்கும். சருமம் பொலிவற்று இருந்தாலோ அல்லது கருமையாக இருந்தாலோ குங்குமப்பூ சிறந்த மருந்து.
இதில் உள்ள ஆன்டி- ஆக்சிடன்ட் இயற்ககையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்.
முகப்பரு பிரச்னையால் அவதிப்படுவோருக்கு அதனை படிப்படியாகக் குறைக்க குங்குமப்பூ பயன்படும். மேலும் சிலருக்கு சருமம் சிவந்து போதல் ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் தொடர்ந்து குங்குமப்பூவைப் பயன்படுத்தினால் மாற்றம் தெரியும்.
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் கண்கள் பொலிவானதாகத் தோன்றும்,
சருமத்தில் உள்ள துளைகளை இறுகச் செய்து சருமத் தொற்றுகளைத் தவிர்க்கும்.
தேங்காய் பால் அல்லது பாதாம் பாலுடன் சேர்த்து பயன்படுத்தும்போதும் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறையும்.
No comments:
Post a Comment