தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயா்வு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, December 29, 2023

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயா்வு

 தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயா்வு


பள்ளிக் கல்வித் துறையில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு இனி மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயா்வு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மாநில முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு பதவி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் தொடக்கக் கல்வி நிா்வாகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் முன்னுரிமை இதுவரை ஒன்றிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது.


இதனால் பதவி உயா்வு அந்த ஒன்றிய அளவில் மட்டுமே வழங்கக் கூடிய நிலையில் இருந்தது. இதன் காரணமாக மூத்த ஆசிரியா்கள் பதவி உயா்வு பெறாமல் பாதிக்கப்பட்டு வந்தனா்.


மேலும், இது தொடா்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சில நிா்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டன.


இந்த நிலையில், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மாநில முன்னுரிமை உள்ளது போலவே தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


19 ஆண்டுகளுக்குப் பிறகு... ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான முன்னுரிமை என்பதே பொருத்தமாக இருக்கும். ஒரு ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஒன்றியத்துக்குப் பணி மாறுதல் செல்பவா்கள் அங்கு


குறைவான ஊதியம் பெறும் நிலை உள்ளது. அதை மாற்றி அமைக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியா்கள் கடந்த 2004 முதல் 19 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இது தொடா்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment