கல்யாண வீட்டில் செய்வது போல் சுவையான பிரிஞ்சி சாதம் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, December 27, 2023

கல்யாண வீட்டில் செய்வது போல் சுவையான பிரிஞ்சி சாதம் செய்வது எப்படி?

 கல்யாண வீட்டில் செய்வது போல் சுவையான பிரிஞ்சி சாதம் செய்வது எப்படி?


செய்முறை


அரை கிலோ பாசுமதி அரிசி எடுத்து அதனை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.


முதலில் Pan-ஐ சூடாக்கி கொள்ளவும். pan சூடான பிறகு 4 டேபிள் ஸ்பூன் நெய், 4 பிரிஞ்சி இலை, 4 அன்னாசி பூ, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் 3 சேர்த்து வதக்கவும்.


பின் அதில் Slice-ஆக நறுக்கிய 3 வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், Slice-ஆக நறுக்கிய தக்காளி 2 சேர்த்து வதக்கவும்.


அதன் பிறகு அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள் சேர்த்து கிண்டவும்.


பின் அதில் ஒரு கப் நறுக்கிய புதினா, 1 கப் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் பண்ணவும். அதன் பிறகு ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து மசாலா மிங்கில் ஆகும் அளவிற்கு பொறுமையாக கிண்டவும்.


பின் அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு 1 கப் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். மிக்ஸ் பண்ணிய பிறகு தேவையான அளவு உப்பு, 750 ml தண்ணீர், 500 ml தேங்காய் பால் சேர்த்து பொறுமையாக மிக்ஸ் பண்ணவும்.


பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து 15-20 நிமிடம் மீடியம் flame -ல் வைத்து வேக வைக்கவும். 15 நிமிடம் கழித்து அதன் மேல் வறுத்த முந்திரி 4, வறுத்த பிரட் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும்.


பின் அடுப்பில் தோஷ டவாவை வைத்து அதன் மேல் பிரிஞ்சி சாதம் வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் சூடாக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சூடான சுவையான கல்யாண ஸ்டைல் பிரிஞ்சி சாதம் தயார்.

No comments:

Post a Comment