மூக்கடைப்பு நீங்க இயற்கை வழிமுறைகள்! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 17, 2023

மூக்கடைப்பு நீங்க இயற்கை வழிமுறைகள்!

 மூக்கடைப்பு நீங்க இயற்கை வழிமுறைகள்!


ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்ட காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்துக் காலை,மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.


விரலி மஞ்சளை தீயில் வாட்டி நுகர்வதன் மூலம் மூக்கடைப்பு நீங்கும்.


பின்னர் நொச்சி, வேப்பிலை, துளசி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து ஆவி பிடிக்கலாம்.


நெல்லிக்காய்ச் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குடித்துவர மூக்கடைப்பு குறையும்.


ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.


சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரக்கூடும். இருப்பினும் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தால், சளி வெளியேறி, மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.


சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment