பிள்ளையாருக்கு உடைக்கும் சிதறு தேங்காயை நாம் எடுத்து உண்ணலாமா? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, December 15, 2023

பிள்ளையாருக்கு உடைக்கும் சிதறு தேங்காயை நாம் எடுத்து உண்ணலாமா?

 பிள்ளையாருக்கு உடைக்கும் சிதறு தேங்காயை நாம் எடுத்து உண்ணலாமா?


திருஷ்டிக்காகவோ அல்லது காரியத்தடை நீங்க வேண்டும் என்பதற்காகவோ உடைக்கப்படும் சிதறு தேங்காயை நாம் எடுத்து உண்ணக்கூடாது.


 திருஷ்டி சுற்றி உடைக்கப்படும் பூசணிக்காயை எடுத்து சமைப்போமா? அல்லது திருஷ்டி சுற்றி போடப்படும் எலுமிச்சம்பழத்தை எடுத்து சாறு பிழிந்து சர்பத் என

குடிக்கத்தான் முடியுமா? அதே போலத்தான் அடுத்தவர்களின் திருஷ்டி போக வேண்டும் என்பதற்காகவும் தோஷம் கழிப்பதற்காகவும் காரியத்தடை நீங்குவதற்காகவும் சுற்றி உடைக்கப்படும் தேங்காயை எடுத்து உண்ணக்கூடாது.


அதே நேரத்தில் ஒருசிலர் வேண்டுதலுக்காக 108 தேங்காய்களை உடைப்பார்கள். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறிய பிறகு மனதில் நிறைவான மகிழ்ச்சியோடு உடைக்கப்படும் சிதறு தேங்காய்களின் துண்டுகளை இறைவனின் அருட்பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை.

No comments:

Post a Comment