எல்.இ.டி. விளக்குகள், லேசர் ஒளிக்கற்றைகள் போன்ற செயற்கை ஒளிகள் சர்க்கரை நோயை அதிகரிக்குமா? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 24, 2023

எல்.இ.டி. விளக்குகள், லேசர் ஒளிக்கற்றைகள் போன்ற செயற்கை ஒளிகள் சர்க்கரை நோயை அதிகரிக்குமா?

 எல்.இ.டி. விளக்குகள், லேசர் ஒளிக்கற்றைகள் போன்ற செயற்கை ஒளிகள் சர்க்கரை நோயை அதிகரிக்குமா?


தினமும் நாம் கடந்து போகும் சாலைகளில் கட்டிடங்களில் மின்னும் எல்.இ.டி. விளக்குகள், லேசர் ஒளிக்கற்றைகள் போன்றவை நீரிழிவு நோயின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.


இந்த ஆய்வின் படி இரவில் செயற்கை வெளிப்புற ஒளி உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில், ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்தி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் காரணமாக சர்க்காடியன் ரிதம் மோசமடைகிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்.இ.டி. ஒளியால், குளுக்கோசின் வளர்சிதை மாற்றம் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது சாதாரண மக்களை விட இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் அழகுக்காக சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உடலானது எல்.இ.டி. விளக்குகளால் இரவு, பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment