கிட்னி ஸ்டோன் உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத உணவுகள்! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, December 2, 2023

கிட்னி ஸ்டோன் உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத உணவுகள்!

 கிட்னி  ஸ்டோன் உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத உணவுகள்!


உடலில் தாதுக்குகள் அதிகப்படியாக சேரும்போது அந்த தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் படிகிறது. இவ்வாறு படியும் தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் கற்களாக படிகிறது.


சிறுநீரகத்தில் கல் பிரச்சினை இருந்தால் ஆக்சலேட் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. அதாவது திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வால்நட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய உணவுகளில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் இந்த உணவுகளை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.


மீன், ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி ஆகியவற்றில் அதிகளவு புரதங்கள் இருப்பதால் சிறுநீரக கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகளவு புரதம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது சிறுநீரகத்தில் புதிதாக கற்கள் வளர வாய்ப்பு உள்ளது.


சிறுநீரகத்தில் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தக்காளியில் வைட்டமின் சி இருப்பதால் இது உடலில் ஆக்சலேட் அளவை அதிகரிக்கச்செய்து சிறுநீரக கல் பிரச்சினையை அதிகரிக்கச்செய்யும். தக்காளி மட்டுமல்லாமல் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.


மீன், ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி ஆகியவற்றில் அதிகளவு புரதங்கள் இருப்பதால் சிறுநீரக கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகளவு புரதம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது சிறுநீரகத்தில் புதிதாக கற்கள் வளர வாய்ப்பு உள்ளது.


சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தக்காளியில் வைட்டமின் சி இருப்பதால் இது உடலில் ஆக்சலேட் அளவை அதிகரிக்கச்செய்து சிறுநீரக கல் பிரச்சினையை அதிகரிக்கச்செய்யும். தக்காளி மட்டுமல்லாமல் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.


சாதாரணமாக இருக்கும் நபர்கள் உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருளையும் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களையும் சாப்பிடக் கூடாத நிலையில் இருக்கும்போது சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் இந்த மாதிரி உணவுகளை சுத்தமாக தவிர்த்துவிட வேண்டும்.


ஒருவேளை இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் அது சிறுநீரக கற்கள் அதிகமாக உருவாவதற்கு தூண்டும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.


சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும்போதுஅதிகம் தண்ணீர் உள்ள உணவுகளை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் நாம் சிறுநீர்கழிக்கும் போது கல் அதன் வழியாக வெளியேற உதவியாக இருக்கும்.


அதனால் வறட்சியான மற்றும் கடைகளில் விற்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment