நாளை (டிசம்பர் 6 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. புயலால் இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
மிக்ஜம் புயல் காரணமாக மிக கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த இருநாள்கள் (டிச. 4 மற்றும் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment