கனமழை எச்சரிக்கை: டிசம்பர் 4 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை மறுநாள் புயலாக மாறி டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மிக்ஜம் புயல் டிச.5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்றும், தற்பொழுது சென்னையிலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வுமையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி 04.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
தற்போது, மாணவர்களின் நலன் கருதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment