தொடர் கனமழை: இன்று (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Update New Districts) - Minnalseithi

Latest

Search This Blog

Monday, December 18, 2023

தொடர் கனமழை: இன்று (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Update New Districts)

 தொடர் கனமழை: இன்று (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Update New Districts)


தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.


தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. 


இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 


தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை :


ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment