அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, November 28, 2023

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 அரசு  பள்ளிகளில்  ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 


இந்த அவகாசத்தை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களின் இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் ஏதாவது செய்ய விரும்பினால், ஏற்கெனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் திருத்தம் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கடந்த மாதம் வெளியிட்டது.



அதன்படி போட்டித் தோ்வு ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கியது. நவ.30-ஆம் தேதி கடைசி நாளாகும்.


இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் 86 பணியிடம், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144, தொடக்கக் கல்வித் துறையில் 78 என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. 


இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இணையவழி விண்ணப்பம் பதிவேற்ற நவ.30ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில், டிசம்பவர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment